10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதப் படைகளின் பல்வேறு கிளைகளில் மொத்தம் 39,481 கான்ஸ்டபிள் (GD) பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது.
தகுதியானவர்கள் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை அக்டோபர் 15ஆம் தேதி இரவு 11 மணி வரை செலுத்தலாம்.
ஆன்லைன் தேர்வு ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் என பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர, இந்த தேர்வு தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும்.
மத்திய ஆயுதப்படை (CRPF) மற்றும் NIA, SSF, Assam Rifles (Rifleman) ஆகியவற்றின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத் துறைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdf