வேலையில்லாதவர்களுக்கு நல்ல செய்தி. கனரா வங்கியில் பட்டப்படிப்பு தகுதியுடன் 3000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிராந்திய வாரியாக வங்கிக் கிளைகளில் பயிற்சியின் (அப்ரண்டிஸ்) ஒரு பகுதியாக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 4 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 3,000
தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி கட்டாயம்.
வயது வரம்பு:
செப்டம்பர் 01, 2024 தேதியின்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினருக்கு ஐந்து ஆண்டுகளும், பிசிக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும் வயது தளர்வு.
பயிற்சி காலம்:
பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், முழுமையான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
https://canarabank.com/pages/Recruitment