மத்திய அரசு நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், நாடு முழுவதும் உள்ள ஓஎன்ஜிசி துறைகளில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 2,236 பணியிடங்கள் நிரப்பப்படும். அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், செக்ரட்டரியல் அசிஸ்டெண்ட், எலக்ட்ரீஷியன், சிவில் எக்ஸிகியூட்டிவ், பெட்ரோலியம் எக்ஸிகியூட்டிவ், ஆபீஸ் அசிஸ்டெண்ட், ஃபயர் சேஃப்டி டெக்னீஷியன், ஃபிட்டர், டீசல் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஸ்டோர் கீப்பர், மெஷினிஸ்ட், சர்வேயர், வெல்டர், ஃபயர் சேஃப் டிரேட் ஆகிய பதவிகள் நிரப்பப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, இன்டர், ஐடிஐ, டிப்ளமோ, பிஏ, பிகாம், பிஎஸ்சி, பிபிஏ, பிஇ, பிடெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18-24க்குள் இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும். கல்வித் தகுதி, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவச் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டால், பட்டதாரி பயிலுனருக்கு மாதச் சம்பளமாக 9 ஆயிரமும், டிப்ளமோ அப்ரெண்டிஸுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயும், டிரேட் அப்ரெண்டிஸுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவலுக்கு ongcindia.com இணையதளத்தைப் பார்க்கவும்.