இந்திய கடற்படையில் பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை குரூப்-பி மற்றும் குரூப்-சி பிரிவுகளில் மொத்தம் 741 பணியிடங்களை நிரப்ப உள்ளது.
குரூப்-பி :
- பொறுப்பாளர் (வெடிமருந்து பட்டறை): 01
- பொறுப்பாளர் (தொழிற்சாலை): 10
- சார்ஜ்மேன் (மெக்கானிக்): 18
- அறிவியல் உதவியாளர்: 04
குரூப்-சி :
- வரைவாளர் (கட்டுமானம்): 02
- தீயணைப்பு வீரர்: 444
- தீயணைப்பு இயந்திர டிரைவர்: 58
- துணை வர்த்தகர்கள்: 161
- பூச்சி கட்டுப்பாடு பணியாளர்: 18
- சமையல்காரர்: 09
- MTS: 16
இந்த பணிக்கு 10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 18 முதல் 63 ஆயிரம் வரை, சில பதவிகளுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் பெறலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – கிளிக் செய்யவும்