விஜய் டிவியில் மிகவும் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை பார்ப்போம்.
அதில் முத்து சாமியார் ஒருவரிடம் சென்றதாகவும் அவர் நகையை எடுத்தவர்களை கண்டுபிடிக்க எலுமிச்சை பழத்தைக் கொடுத்ததாகவும் இதன் மூலம் நகையை எடுத்தவர்கள் வாய் இழுத்து கிடப்பார்கள் எனவும் வீட்டார்களுக்கு பயம் காட்டி எலுமிச்சை பழத்தை சாமி அறைக்குள் வைக்கின்றார் முத்து.
இதனால் மனோஜ் இரவு முழுக்க தூக்கம் வராமல் எலுமிச்சை பழத்தை நினைத்து பயப்படுகிறார். அதைப்போல விஜயாவும் வாய் இழுத்துப் போகும் என பயப்படுகிறார்.
இதனால் இருவரும் சேர்ந்து அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து வீசுவதற்காக சாமி அறைக்குள் செல்கின்றார்கள். அதை எடுத்துவிட்டு வெளியே வரும்போது கையும் களவுமாக பிடிப்படுகின்றார்கள்.
அந்த நேரத்தில் வந்த முத்து இப்ப விளங்குதா நான் எதுக்கு எலுமிச்சை பழத்தை இங்க வச்சேன் என எல்லோரும் முன்னிலையும் விஜயாவையும் மனோஜையும் கையும் களவுமாக பிடிக்கின்றார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.