Sunday, January 26, 2025

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியீடு..!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகர் விஜய்சேதுபதி. இவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், அப்பா மகளுக்கு இடையில் ஏற்படும் பிரிவினை மையமாக வைத்து எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சியுடன் இப்படம் அமைந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ‘மகாராஜா’ திரைப்படம் வரும் (ஜூலை 12) NETFLIX OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!