தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை மன்னனாக வலம் வருபவர் வடிவேலு. இதுவரை காமெடி கேரக்டரில் மட்டுமில்லாமல் குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் கலக்கியுள்ளார்.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘கேங்கர்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், வடிவேலு நடிக்கும் மற்றொரு படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, மாமன்னன் படத்திற்கு பிறகு பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மாரீசன்’.
இந்த படம் யுவன் சங்கர் ராஜா இசையில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ளது. பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து அசத்திய ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் இப்படம் உருவாகி வருகிறது.