ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி நடித்துள்ள படம் ‘The GOAT’. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் விஜய் இரட்டை வேடங்களில் ஸ்டைலிஷ்ஷாக அசத்துகிறார். இன்று மாலை காட்சி முதல் இடைவேளையின்போது இந்த டிரெய்லர் ஒளிபரப்பாகும் என திரையரங்குகள் தெரிவித்து வருகின்றன.