நடிகர் கார்த்தி – அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மெய்யழகன். இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதன் காரணத்தினால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
நடிகர் கார்த்தி பேண்ட் ஷர்ட் போட்டு மாடலாக படங்களில் நடிப்பதை விட வேட்டி சட்டை அணிந்து நடிக்கும் திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு குடும்பப் பாங்கான கிராமத்துக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மெய்யழகன். இதில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன் என பலர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்கள்.
கார்த்தி இறுதியாக நடித்த ஜப்பான் படத்திற்கு பிறகு வா வாத்தியார், மெய்யழகன் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகின்றார். அத்துடன் சர்தார் 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் கார்த்தி.
மேலும் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் மெய்யழகன் படத்தின் ஷூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடைந்தது. அதன் பின்பு இந்த படம் எதிர்வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த மெய்யழகன் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது. அத்துடன் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில், மெய்யழகன் படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். தற்போது மெய்யழகன் படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.