நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் நேற்று இந்தியன் 2 வெளியானது. தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது. படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம், இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. தமிழில் ரூ.17 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும், இந்தியில் 1.1 கோடியும் வசூலித்துள்ளது.