
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. இப்படத்தை KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டெ நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்னர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆவார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதற்கிடையில் தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நேரத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 11 மணிக்கு தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது #thalapathy 69 என்ற ஹாஷ்டேக் x தளத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.