நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து உணர்வுபூர்வமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், படத்தின் 2-வது பாடலான தங்கலான் வார் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.