லக்கி பாஸ்கர் படத்தின் 5 நாள் வசூல் விவரம்!
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் அட்லூரி.
வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி இந்த படம் 5 நாட்களில் ரூ.58 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Posted in: சினிமா