தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி டட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களது திருமணம் கோவாவில் கடந்த 12ம் தேதி இந்து முறைப்படி நடைபெற்றது.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷும் ஆண்டனியும் கிறிஸ்துவ முறைப்படி ஒன்று சேர்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கீர்த்தியும் ஆண்டனியும் வெள்ளை நிற உடையில் பளிச்சென்று காணப்பட்டனர். இரு வீட்டாரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சலசலப்புக்கு மத்தியில் இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.