தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பஹீரா.
இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரபுதேவா நடித்துள்ள புதிய படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஜே.எம்.ராஜா இயக்கத்தில் பிரபுதேவா நடித்துக்கும் படம் சிங்காநல்லூர் சிக்னல். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சிங்காநல்லூர் சிக்னல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில், பிரபுதேவா போக்குவரத்து காவலராக நடித்துள்ளார் என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிகிறது.
First look poster of #SinganallurSignal Starring PrabhuDeva 🌟
Directed by JM Raja🎬 pic.twitter.com/eEdjHodG4R— AmuthaBharathi (@CinemaWithAB) July 1, 2024