விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை நிறைவு செய்து தற்போது 8வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போவதாக ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகின.
இந்த நிலையில் பிக் பாஸ் குழு தற்போது அதில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து வரும் நிலையில், தற்போது இந்த 8வது சீசன் தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் தொடங்க உள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.