ஒன்பது நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்!
நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் கடந்த வாரம் தீபாவளியன்று வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது, இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனையை அமரன் செய்து வருகிறார்.
இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 9 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அமரன் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அமரன் படம் 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.195 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
Posted in: சினிமா