நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!
ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில், குணசித்திர வேடங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ்.
சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ள இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவ்வாறு பல்வேறு தரப்பட்ட தளங்களில், தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய டெல்லி கணேஷ், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80. சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.