
கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் மலிவு விலையில் கார்களை விற்பனை செய்வதன் மூலம் மாருதி சுஸுகி நகரம் முதல் கிராமம் வரை பேர் போகியுள்ளது. குறிப்பாக ஆல்டோ K10 ஒரு பிரபலமான கார். இது அதிக அளவில் வாங்கப்படுகிறது. சமீபத்தில் செப்டம்பர் (2024) மாதத்திற்கான கார் விற்பனையைப் பார்க்கும்போது, ஆல்டோ K10 கார்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. அதைப் பற்றி முழு விபரங்களும் தெரிந்து கொள்வோம்.
கடந்த மாதம் (செப்டம்பர் – 2024), மாருதி சுசுகி ‘ஆல்டோ K10’ ஹேட்ச்பேக் 8,655 யூனிட்களை விற்பனை செய்தது. 2023 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 7,791 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சி 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாருதி சுஸுகி ஆல்டோ K10 ஹேட்ச்பேக் ஆகஸ்ட் மாதத்தில் 8,546 யூனிட்களையும், ஜூலையில் 7,353 யூனிட்களையும், ஜூன் மாதத்தில் 7,775 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட Arena டீலர்ஷிப்கள் செப்டம்பர் மாதத்தில் Alto K10 காரை வாங்கும்போது பெரும் தள்ளுபடியை அறிவித்ததால் நாடு முழுவதும் Alto K10-ன் விற்பனை அதிகரித்தது.
தற்போது இந்திய சந்தையில் வாங்குவதற்கு கிடைக்கும் மாருதி சுஸுகி ஆல்டோ K10 ஹேட்ச்பேக்கின் நுழைவு நிலை வேரியன்ட்டின் விலை ரூ.3.99 லட்சம். டாப்-எண்ட் வேரியன்ட்டின் விலை ரூ. 5.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
இந்த மாருதி சுஸுகி ஆல்டோ கே10 1-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 67 பிஎஸ் ஹார்ஸ் ஆற்றலையும், 89 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் உள்ளது.
CNG இயங்கும் மாடலும் அதே 1 லிட்டர் எஞ்சினைப் பெறுகிறது. இது வெறும் 57 பிஎஸ் ஹார்ஸ் ஆற்றலையும், 82 என்எம் பீக் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். இந்த கார் லிட்டருக்கு 24.39 முதல் 33.85 கிமீ மைலேஜ் தரும்.
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் நெருங்கும் நிலையில், மாருதி சுஸுகி ஆல்டோ K10 ஹேட்ச்பேக் பல நுகர்வோரால் தங்களின் விருப்பமான வாகனமாக கருதப்படுகிறது. இந்த அக்டோபரில் பல்வேறு Arena டீலர்ஷிப்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. இதன் மூலம் கார் விற்பனையை அதிகரிக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.